ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க கம்பஹா தொகுதியில் பொதுஜன பெரமுன, ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க கூட்டு செயற்றிட்டம்

04 Aug, 2024 | 02:47 PM
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கம்பஹா தொகுதியில் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த கூட்டு செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டது.

கம்பஹா தொகுதியில் கம்பஹா மாநகர சபை மற்றும் கம்பஹா பிரதேச  சபை என இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இந்நிகழ்வின் அழைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய நாலக கொடஹேவா தற்போது ஐ.ம.சக்தியுடன் இருக்கின்றார். எனவேதான் கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செயற்படுகின்றார்.

கம்பஹா உள்ளூராட்சி சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டு பாராளுமன்ற  உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆகும். இதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 16 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

கம்பஹா நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டு பாராளுமன்ற  சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆகும். அவர்களில் 12 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இது தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண தீப்த ராஜபக்ஷவுடன் உள்ளூராட்சி மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  வாக்கெடுப்பு நிலைய முகவர்கள் நியமித்தல், சிறிய பொதுக் கூட்டங்கள் மற்றும் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளையும் கொண்ட கூட்டு வழிநடத்தல் குழுவும் நியமிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை...

2024-10-13 11:03:13
news-image

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு...

2024-10-13 11:23:53
news-image

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் -...

2024-10-13 11:04:44
news-image

அநுர - ரணில் இடையே வித்தியாசமில்லை...

2024-10-13 10:30:26
news-image

196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி...

2024-10-13 10:13:12
news-image

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு...

2024-10-13 10:50:56