நீர்கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாவுக்காக சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் இன்று மதியம் 1 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியாவில் நடைபெற்று வரும் வசந்தகால நிகழ்வுகளை கண்டுகளிப்பதற்காக நீர்கொழும்பிலிருந்து சென்றுக் கொண்டிருந்த குறித்த சுற்றுலா பயணிகள் பகல் உணவிற்காக டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் சமைத்துக் கொண்டிருக்கும் வேளையின் போது அப்பகுதியில் மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவர்களை இவ்வாறு தாக்கியுள்ளது.

குறித்த சுற்றுலா பயணத்தில் 25 பேர் சென்றதாகவும், இதில் 6 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், அதில் 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.