லெபனானில் உள்ள அமெரிக்கா பிரஜைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டுமென அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிடைக்கி;ன்ற விமானபயணச்சீட்டுகளை பயன்படுத்தி உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம்அதிகரித்து வரும் சூழ்நிலையிலேயே அமெரிக்காவின் இந்த அவசர வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
லெபனானில் தொடந்தும் தங்கயிருக்க விரும்புபவர்கள் அவசரசூழ்நிலைக்கான திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள லெபனானிற்கான அமெரிக்கதூதரகம் குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலத்திற்கு தங்கியிருப்பதற்கு அவர்கள் தயாராகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல விமானநிறுவனங்கள் தங்கள் சேவைகளை இரத்துச்செய்துள்ளன விமானபயணசீட்டுகள் முடிவடைந்து விட்டன என லெபனானிற்கான அமெரிக்க தூதுரகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மிக வேகமாக மோசமானதாக மாறலாம் என பிரிட்டன் எச்சரித்துள்ளது.
விமானசேவைகள் தொடர்கின்ற சந்தர்ப்பத்திலேயே பொதுமக்கள் லெபானிலிருந்து வெளியேறவேண்டும் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது பிரஜைகளை லெபனானிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலையேற்பட்டால் அதற்கு உதவுவதற்காக மேலதிக படையினரையும் தூதரக பணியாளர்களையும் லெபனானிற்கு அனுப்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM