பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் குறித்து இன்னும் இறுதி தீர்மானமில்லை : ரணில் - மஹிந்த சந்தித்து பேச்சு!

04 Aug, 2024 | 10:08 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. சுயாதீன வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரிய கடிதத்தை பரிசிலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (01) இரவு இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே மேற்கண்டவறு குறிப்பிட்டுள்ளார். 

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது தனித்து வேட்பாளரை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்தது. இதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் சுமார் 90 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை என்றும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து கட்சியில் தீவிர பிளவுகள் ஏற்பட்டது.

எனினும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஓரணியில் பயணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் பிரகாரமே இருதரப்பு சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. தனிப்பட்ட தீர்மானமாக இல்லாது, கட்சியின் ஏகோபித்த தீர்மானமாகவே ஜனாதிபதி வேட்பாளர் விடயம் இருக்க வேண்டும். எனவே, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம் என்று இதன்போது மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சி அரசியலுக்குள் சிக்கி நாட்டின் எதிர்காலத்தை சீரழித்துவிடக்கூடாது என்பதற்காகவே சுயாதீன வேட்பாளராக போட்டியிடுகின்றேன். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை நிலையானதொரு அபிவிருத்திக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான ஒருமைப்பாடு நமக்குள் ஏற்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் நிலையில் ஆதரவு கோரி அனுப்பிய கடிதத்தை பரிசிலித்துள்ளேன். ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் தனித்து தீர்மானிக்க இயலாது. இவ்வாரத்துக்குள் வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்துவிடுவோம் என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13