பிறந்து 45 நாட்களேயான குழந்தை யாழில் உயிரிழப்பு : விசாரணை ஆரம்பம்!

04 Aug, 2024 | 09:56 AM
image

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் சனிக்கிழமை (03) உயிரிழந்துள்ளது. 

பிறந்து 45 நாட்களேயான குழந்தையே உயிரிழந்துள்ளது. 

குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது. உடனே குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்து, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. 

குழந்தையின் உடல் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி  மேற்கொண்டார். 

குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 

உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

குழந்தையின் மரணம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:16:49
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43
news-image

முல்லைத்தீவு மாத்தளன் சிறுகடலில் அதிர்ச்சி: இலட்சக்கணக்கான...

2026-09-07 14:46:14
news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56
news-image

தூய்மையான நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர...

2026-09-07 14:17:54
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழா...

2026-09-07 14:04:24
news-image

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி...

2026-09-07 13:57:30
news-image

‘GovPay’ பெயரில் போலி இணையத்தளம் -...

2026-09-07 13:49:50