(ஆர்.ராம்)
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூடித் தீர்மானிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை பத்து மணிக்கு கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெறவுள்ளது.
இந்த உச்சபீடக் கூட்டத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களும் கட்டாயமாக பங்கேற்குமாறு கட்சித்தலைவர் ஹக்கீமால் அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்தவாரத்துக்குள் மு.கா.ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான தனது நிலைப்பாட்டை தீர்மானித்து அறிவிக்கும் என்று அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தபோதும் எந்தவிமான சந்திப்புக்களும் நடைபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்மட்டக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள கட்சிக்காரியாலத்தில் நடைபெறவுள்ளது.
அக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்துள்ளதோடு அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் போக்கைக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்திப்பின்போது தமது கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுக்கும் என்றும் அத்துடன் முஸ்லிம்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி பத்துவிடயங்களை மையப்படுத்தியே அந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முஸ்லிம்களின் விவகாரங்கள் அடங்கிய பத்துவிடயங்கள் ஜனாதிபதி வேட்பாளரிடத்தில் கையளித்து நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM