(நெவில் அன்தனி)
பிரான்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (03) நடைபெற்ற பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் பெணகளுக்கான 800 மீற்றர் Repechage என்ற இராண்டாம் வாய்ப்பு தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய இளம் வீராங்கனை தருஷி கருணாரட்ன அந்த சுற்றுடன் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறிய நான்காவது இலங்கையர் தருஷி கருணாரட்ன ஆவார்.
கங்கா செனவிரட்ன (நீச்சல் வீராங்கனை), கய்ல் அபேசிங்க (நீச்சல் வீரர்), விரேன் நெத்தசிங்க (பாட்மின்டன்) ஆகிய மூன்று இலங்ககையர்கள் ஏற்கனவே முதல் சுற்றடன் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியவர்களாவர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றி அப் போட்டியை 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்ற தருஷி, ஒட்டுமொத்த நிலையில் 50 பேரில் 45ஆவது இடத்தைப் பெற்றார்.
இதனை அடுத்து சனிக்கிழமை (03) நடைபெற்ற Repechage எனும் இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் பங்குபற்றிய தருஷி அப் போட்டியை 2 நிமிடங்கள் 06.66 செக்கன்களில் நிறைவு செய்து 7ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
இரண்டாம் வாய்ப்பு தகதிகாண் சுற்றில் 4 போட்டிகளில் 31 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் தருஷி 27ஆவது இடத்தைப் பெற்றார்.
தன்னால் நிலைநாட்டப்பட்ட தேசிய சாதனையை (2:00.66 நி.) ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முறியடிக்கும் குறிக்கோளுடன் பங்குபற்றுவதாகத் தெரிவித்த தருஷியினால் அதனை அண்மிக்க முடியாமல் போனது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM