சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி!

03 Aug, 2024 | 06:16 PM
image

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'பிரதர்' திரைப்படம் தீபாவளியன்று பட மாளிகைகளில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிரதர்' திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், நட்டி என்கிற நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மக்காமிஷி' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான நடன காணொளியும் வெளியாகி நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 31 ஆம் திகதியன்று.. தீபாவளி திருநாளன்று பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'அமரன்' எனும் திரைப்படமும் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று பட மாளிகையில் வெளியாகிறது என்பதும், சிவகார்த்திகேயனும், ஜெயம் ரவியும்  வணிக ரீதியான வெற்றி பெறும் படைப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும்.. இந்த இரண்டு நட்சத்திரங்களும் நடித்த படங்கள் ஒரே திகதியில் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15
news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48
news-image

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்'...

2024-09-12 16:50:19
news-image

மீண்டும் வடிவேலு - சுந்தர் சி...

2024-09-12 16:10:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...

2024-09-12 13:35:36