தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனாக திகழும் நடிகர் அஜித்குமார் திரையுலகில் கலை சேவை செய்ய தொடங்கி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அவரின் நடிப்பில் தயாராகி வரும் 'விடா முயற்சி' படக் குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது.
1993 ஆம் ஆண்டில் வெளியான 'அமராவதி' படத்தின் மூலம் நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'ஆசை', 'வான்மதி', 'காதல் கோட்டை', 'உல்லாசம்', 'காதல் மன்னன்', 'அவள் வருவாளா', 'வாலி', 'ஆனந்த பூங்காற்றே', 'அமர்க்களம்', 'நீ வருவாய் என', 'முகவரி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என ஏராளமான படங்களின் நடித்து நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடித்தார்.
அதன் பிறகு 'தீனா', 'சிட்டிசன்' போன்ற படங்களில் நடித்து எக்சன் ஹீரோவாகவும் உயர்ந்தார்.
'வில்லன்', 'வரலாறு', 'பில்லா' என வணிக ரீதியான வெற்றிப் படங்களையும் வழங்கி, வசூல் சக்கரவர்த்தியாகவும் வளர்ந்தார்.
'வீரம்', 'விஸ்வாசம்', 'துணிவு' ஆகிய படங்களில் நடித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்து, பொக்ஸ் ஓபீஸ் சுப்பர் ஸ்டாராகவும் உயர்ந்த நடிகர் அஜித்குமார்.. தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியாக கூடும் என்ற நம்பிக்கையில் தீவிரமாக உழைத்து வரும் படக் குழு, அஜித் குமார் திரையுலகில் நுழைந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிடும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் ,'32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்... ஆறா ரணங்களும்... \யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடா முயற்சி' என குறிப்பிட்டிருப்பதால், ரசிகர்களிடத்தில் இந்த போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM