வாஸ்கோடகாமா - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : 5656 புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : நகுல், அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்.
இயக்கம் : ஆர் ஜி கே
மதிப்பீடு : 2/5
'பொய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, 'காதலின் விழுந்தேன்' படத்தின் மூலம் நட்சத்திர நடிகராக உயர்ந்த நடிகர் நகுல், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் 'வாஸ்கோடகாமா'. அவரின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் வரவேற்கிறார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கே. எஸ். ரவிக்குமாருக்கு பிறந்த வாரிசுகள் நகுல் மற்றும் வம்சி கிருஷ்ணா. இவர்களில் வம்சி கிருஷ்ணா- கே. எஸ். ரவிக்குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார். அவரிடம் இருந்து கே. எஸ். ரவி குமாரை காப்பாற்ற நகுல் முயற்சிக்கிறார். இவர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பதை எதிர்கால சமுதாயத்தில் நடைபெறும் சம்பவங்களுடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
இன்னும் சில ஆண்டுகளில் மக்களிடையே அன்பு பகிர்தல் குறைந்து, விரோதம்- குரோதம் -துரோகம் அதிகரித்திருக்கும். அப்போதைய சமூக சூழல் எப்படி மாறி இருக்கும்? என்பதனை கற்பனை செய்து, ஒரு உலகத்தை இயக்குநர் படைத்து, அதனை விவரித்திருக்கிறார்.
இதில் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சற்று கலகலப்பு கிடைக்கிறது. குறிப்பாக நல்லவர்கள் அனைவரும் சிறையிலும்.. கெட்டவர்கள் அனைவரும் வெளியிலும் இருப்பது போன்ற காட்சி அமைப்பு ரசிக்க வைக்கிறது. ஆனால் அதற்காக எழுதப்பட்ட திரைக்கதை ... பயன்படுத்தப்பட்ட உரையாடல் .. ஆகியவை பலவீனமாக இருப்பதால், சிரிக்கவும் முடியாமல் , மெல்லவும் முடியாமல் கடக்க வேண்டியதிருக்கிறது.
நகுல் சிறிய இடைவேளைக்குப் பிறகு கதையின் நாயகனாக தோன்றுகிறார். அவருடைய முகத்தில் இளமை மிஸ்ஸிங் ஆனது அப்பட்டமாக காணப்படுகிறது. நடிப்பிலும் அவர் இன்னும் 'பொய்ஸ்' லெவலிலேயே இருக்கிறார்.
கதாநாயகி அர்த்தனா பினு - வழக்கம்போல தமிழ் திரைப்பட கதாநாயகியாக திரையில் தோன்றுகிறார் அவ்வளவுதான்.
இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் இரண்டாம் பாதியில் தன் இருப்பை அழகாக உணர வைக்கிறார்.
வில்லனாக வம்சி கிருஷ்ணா- வழக்கம்போல் தன்னுடைய மிகையான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
கதை கலாட்டாவான கற்பனையாக இருந்தாலும்.. அதனை அழுத்தமில்லாத திரைக்கதையால்.. படைப்பை நுனிப்புல்லாக மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.
இயக்குநருக்கு கலை இயக்குநர் + ஒளிப்பதிவாளர் + இசையமைப்பாளர்+ படத்தொகுப்பாளர்+ இவர்கள் ஓரளவு கை கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் இயக்குநரின் பலவீனமான திரை எழுத்து மற்றும் காட்சி மொழியால் படைப்பை ரசிக்க முடியாமல் சோர்வை ஏற்படுத்துகிறது.
வாஸ்கோடகாமா - ஓ டி டி ரகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM