தயாரிப்பு : இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்
நடிகர்கள் : விஜய் அண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், ஆர். சரத்குமார், டாலி தனஞ்செயா, பிருத்வி அம்பர், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்
இயக்கம் : விஜய் மில்டன்
மதிப்பீடு : 2.5/5
ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தன்னுடைய திறமையை தொடர்ச்சியாக சர்வதேச தரத்துடன் வெளிப்படுத்தி வரும் விஜய் மில்டன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் எக்சன் ஜேனரிலான திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி 2012 ஆம் ஆண்டில் வெளியான 'நான்' படத்தின் இரண்டாம் பாகம்தான் 'மழை பிடிக்காத மனிதன்' என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனை இயக்குநர் மறுத்திருக்கிறார். இது தொடர்பான சர்ச்சை இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கதையின் நாயகனான விஜய் அண்டனி - சத்யராஜ் + சரத்குமார் ஆகியோர் தலைமையில் இயங்கும் ரகசிய பாதுகாப்பு படையில் பணியாற்றுகிறார். இவர் தன்னுடைய உயரதிகாரியான சரத்குமாரின் தங்கையை திருமணம் செய்து கொள்கிறார். விஜய் அண்டனியால் பாதிக்கப்பட்ட அமைச்சர், தன் ஆட்களை வைத்து ஒரு மழை நாளில் விஜய் அண்டனியை கொலை செய்வதற்கான பெரிய தாக்குதலை நிகழ்த்துகிறார். அந்த தாக்குதலில் விஜய் அண்டனியின் காதல் மனைவி இறந்து விடுகிறார். ஆனால் விஜய் அண்டனியை உயர் அதிகாரியும், அவருடைய மனைவியின் சகோதரருமான சரத்குமார் காப்பாற்றி, அந்த தாக்குதலில் அவர் இறந்து விட்டதாக சாட்சியத்தை உருவாக்கி, அவருடைய சுய அடையாளத்தை அழித்து, தூரமாக உள்ள பகுதியில் தலைமறைவாக வாழ்க்கையை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்து அவரை புதிய இடத்தில் தங்க வைக்கிறார்.
அந்த ஊரில் எந்த பிரச்சனைக்கும் செல்லாமல் அமைதியாக வாழத் தொடங்குகிறார் விஜய் அண்டனி. அவர் மீது உணவகம் நடத்தும் பெண்மணியின் தாய் அன்பும், அவருடைய மகனின் நட்பும் கிடைக்கிறது. இந்த புதிய உறவுகளுக்கும், அந்த ஊரில் ரவுடிகளை வைத்து கந்துவட்டி வசூலிக்கும் கும்பலுக்கும் பிரச்சனை உண்டாகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து தன் மீது அன்பு காட்டிய புதிய உறவை விஜய் அண்டனி காப்பாற்றுகிறார். இதனால் அவருக்கு எம்மாதிரியான சிக்கல்கள் ஏற்படுகின்றன? அதனை எப்படி அவர் எதிர்கொள்கிறார்? மறைந்து வாழ சொன்ன சரத்குமாரின் கட்டளையை மீறியதால் அவர் என்ன முடிவினை மேற்கொள்கிறார்? இதை விவரிப்பதுதான் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் கதை.
கதையாக கேட்கும் போதும்.. வாசிக்கும் போதும்.. சுவராசியமாக இருக்கும் இதனை புதிய நிலவியல் பின்னணியில் காட்சிப்படுத்தி ரசிகர்களை காட்சி மொழியால் கவர்கிறார்கள் பட குழுவினர். ஆனால் திரைக்கதையின் பயணத்தில் எந்தவித புதுமையும் இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பயணிப்பதால் சோர்வும், தொய்வு ஏற்படுகிறது. ஆனால் எக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது. எக்சன் பிரியர்களுக்கு சரியான விருந்தாகவும் அமைந்திருக்கிறது.
கதையின் நாயகனான விஜய் அண்டனியின் வழக்கமான ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பு சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் பொருந்தாமல் தடுமாறுகிறது. குறிப்பாக எக்சன் காட்சிகள். ஆனால் அதே தருணத்தில் குட்டி நாய் மீது இவர் காட்டும் இரக்கம் ... ரசிகர்களை கவர்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் நடிகர் டாலி தனஞ்செயா வழக்கமான வில்லனாக இயல்பாக நடித்திருக்கிறார்.
மேகா ஆகாஷை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ப்ருத்வி அம்பரும் அழகான தெலுங்கு நாயகனாக மிகையாக நடித்திருக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன் வழக்கமான அம்மாவாக நடித்திருக்கிறார். சரத்குமார் வழக்கம்போல் இயல்பாக நடித்திருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரும் தனது இருப்பை அழகாக்கியிருக்கிறார்.
ரசிகர்களை ஓரளவிற்கு ஆறுதல் தருவது இசை -படத்தொகுப்பு - ஒளிப்பதிவு - என பட்டியலிடலாம். அத்துடன் உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகளையும் தெரிவிக்கலாம். அதிலும் குறிப்பாக 'கெட்டவர்களை அழிக்க கூடாது. அவர்களிடத்தில் இருக்கும் கெட்ட விடயங்களை தான் அழிக்க வேண்டும்' என கதையின் நாயகன் பேசுவதும், உணர்த்துவதும் நச்.
மழை பிடிக்காத மனிதன் - ஆதரவலையை எழுப்பாத படைப்பு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM