தயாசிறி ஜயசேகர தரப்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சஜித்துக்கு ஆதரவு!

Published By: Digital Desk 3

03 Aug, 2024 | 05:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி  ஜயசேகர,திலங்க சுமதிபால,ரோஹன லக்ஷமன் பியதாஸ ஆகிய தரப்பினர்களை கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும்,எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். 

சட்டவிரோதமான முறையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுதந்திர கட்சியின் தலைமையகத்தை ஆக்கிரமித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிடுவது செல்லுபடியற்றது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் ஒரு அணி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பிறிதொரு அணி,பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தரப்பில் பிறிதொரு அணி என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூன்றாக பிளவடைந்துள்ளது.

கொழும்பில் இன்று  சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு கூட்டத்தை நடத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானம் எடுத்துள்ளோம்.

இதற்கமைய ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவும்,கூட்டணியில் இணைந்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்.

அரசாங்கத்துடன் எவரும் இணைந்துக் கொள்ள கூடாது என சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு 2023.11.11 ஆம் திகதி ஏகமனதாக தீர்மானித்தது.

இந்த தீர்மானத்துக்கு எதிராக நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினர் அமைச்சு பதவிகளுக்காக அரசாங்கத்தில் இணைந்துக் கொண்டார்கள்.அரச அதிகாரத்துடன் சட்டவிரோதமான முறையில் சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தை ஆக்கிரமித்துள்ளார்கள்.

நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை செல்லுபடியற்றது.

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த  தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை கொண்டு நிறைவேற்றுக்கு குழு கூட்டத்தை நடத்தி,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏகமனதாக ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு;...

2024-09-18 03:06:28
news-image

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை...

2024-09-18 03:18:02
news-image

51/1 தீர்மானத்தின் ஊடாக உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு...

2024-09-18 03:01:51
news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06
news-image

தோற்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றியைக் கொண்டாடுங்கள்...

2024-09-17 20:20:29