பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் முடி உதிர்தல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

03 Aug, 2024 | 05:24 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களது உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டதால்.. அவர்களுக்கு பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு முடி உதிர்தல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.  இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் முடி உதிர்தல் பற்றி பெற்றோர்கள் போதுமான அளவிற்கு விழிப்புணர்வை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

பொதுவாக குழந்தை பிறந்தவுடன் அவர்களது தலைமுடி பொன் நிறத்தில் இருக்கும். இந்த முடி நிரந்தரமானதல்ல. குழந்தைகளின் தலையில் இருக்கும் இந்த முடி குழந்தை பிறந்து ஒன்றரை மாதத்திலிருந்து இரண்டு மாதத்திற்குள்ளாக உதிர்ந்து விடும். அதன் பிறகு பெற்றோர்களின் பாரம்பரிய மரபணுவின் சதவீதத்தின் படி.. அவர்களுக்கு முடி வளரத் தொடங்கும். பெற்றோர்களுக்கு தலை முடியின் எண்ணிக்கையும், அடர்த்தியும் குறைவாக இருந்தால்... அவர்களது வாரிசுக்கும் தலைமுடியின் எண்ணிக்கையும், அடர்த்தியும் குறைவாகத்தான் இருக்கும். 

வேறு சில பெற்றோர்கள் எம்முடைய பிள்ளைகளுக்கு ஏழாவது மாதத்தில் முடி உதிர்கிறது. இது ஏன்? என்றும், இது ஏதேனும் ,நோய் பாதிப்பிற்கான அறிகுறியா? என்றும் வைத்தியர்களிடம் வினாவாக கேட்பார்கள். ஏழாவது மாதத்தில் இருந்து ஒரு வயதிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் தலைமுடி உதிர்வு என்பது இயல்பானது. இவர்களுக்கு இந்தத் தருணத்தில் நாளாந்தம் நூறு முடிகள் வரை உதிரக்கூடும். ஆனால் இவை நாளடைவில் மீண்டும் வளர்ந்து விடும். ஏனெனில் முடி என்பது இறந்த செல்களிலிருந்து உருவாகிறது. இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி சீராக இருப்பதால்.. முடி உதிர்வு என்பது இயல்பானது தான். இதற்காக அச்சம் கொள்ள தேவையில்லை. 

அதேபோல் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் வெகு சிலருக்கு மட்டும் அலோபிசியா அரிட்டா மற்றும் அலோபிசியா டோட்டாலிஸ் எனும் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பிள்ளைகளுக்கு வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளின் மூலம் முழுமையான நிவாரணத்தை அளிப்பர். மேலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முடி உதிர்வு ஏற்படாமல் இருப்பதற்காக மகப்பேறு வைத்தியர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் பல்நோக்கு விற்றமின் சத்து ஆகியவற்றை கட்டாயமாக வழங்க வேண்டும் என பரிந்துரைப்பார்கள். இந்த பரிந்துரையை பெற்றோர்கள் உறுதியாக கடைப்பிடித்தால்... பச்சிளம் குழந்தைகளுக்கு முடி உதிர்வு பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும். 

வைத்தியர் தனசேகர்

தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37
news-image

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா எனும் கல்லீரல் புற்றுநோய்...

2024-09-12 16:42:06
news-image

தசை வலியை கண்டறியும் பரிசோதனை -...

2024-09-11 17:22:29
news-image

ஒரு பக்க காது கேளாமைக்கான நவீன...

2024-09-10 15:44:35
news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20