வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான எளிய பரிகாரம்...!?

03 Aug, 2024 | 04:27 PM
image

இன்றைய சூழலில் தெற்காசிய நாடுகளில் குறைவற்ற மனித வளம் இருக்கிறது. ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்வதற்கு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரிய வேண்டும் என்றால்... கல்வித் தகுதி, உடல் தகுதி, அனுபவம்.. ஆகியவை வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் தொழிலாளர்கள் - தங்களின் தகுதிக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற வேலைகளை விட, தங்களுடைய சமுதாய நிலைக்கு ஏற்றதான ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள்.  இதனால் பலரும் பல தருணங்களில் வேலை வாய்ப்பினை பறி கொடுக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்காக கிடைத்த வேலையை குறைவான ஆர்வத்துடன் திருப்தி இல்லாமல் செய்கிறார்கள். இந்நிலையில் உங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு கிடைப்பதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். 

நீங்கள் நாளாந்தம் அலுவலகத்திற்கு புறப்படும் போது சொக்ஸ் அணிந்து அதனுடன் காலணிகளை அணிந்து கொண்டு செல்பவர் என்றால்.. உங்கள் காலணியின் வண்ணம் கருப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் கருப்பு வண்ண காலணிகளை பாவிக்கும் போது, அதனை பாலிஷ் செய்து பாவிக்க தொடங்குங்கள். இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது உங்களுக்கான பணி வாய்ப்பு கிடைக்கும். 

அதே தருணத்தில் நீங்கள் சொக்ஸ் அணியாமல் காலணிகளை மட்டுமே அணிந்து கொண்டு பணியாற்றுபவர்கள் என்றால்.. உங்களது காலணியை அவை எந்த வண்ணமாக இருந்தாலும் மாற்றிக் கொண்டு, புதிய கருப்பு வண்ணத்திலான காலணியை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். 

சொக்ஸ் நிறமும் கருப்பு , காலணி வண்ணமும் கருப்பு என இருந்தால்.. உங்களுக்கான வேலை வாய்ப்பு குறைவான முயற்சியிலேயே கிடைக்கும்.

காலனி மட்டுமல்ல சிலருக்கு காலணிகளை மாற்றுவதற்கு மனம் இருக்காது அல்லது அதனை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். ஆனாலும் வேலை இல்லாமல் தவிப்பர். இவர்கள் சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் விற்பனை செய்யப்படும் ஒன்பது முடிச்சுகள் கொண்ட கருப்பு வண்ண கயிறை வாங்கி வலது கையில்  கட்டிக் கொள்ள வேண்டும். 

கருப்பு வண்ண கயிறை கையில் கட்ட விருப்பமில்லை என்றால்... அதனை கால்களில் கட்டிக் கொண்டாலும் பலன் கிடைக்கும். அதாவது குறைவான முயற்சியிலேயே பணி வாய்ப்பு கிடைக்கும்.

சிலருக்கு இதிலும் பெரிதாக ஆர்வம் இருக்காது. ஆனாலும் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். இவர்கள் நாளந்தம் பாவிப்பதற்கு துவி சக்கர வாகனத்தை வைத்திருந்தால்... அதன் முன் சக்கரம் அல்லது பின் சக்கரத்தின் டயர்களை புதிதாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் இருந்தாலும் அதிலும் சக்கரத்தின் டயர்களை புதிதாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது உங்களுக்கும் குறைவான முயற்சியிலேயே வாழ்வாதாரத்திற்கான பணி ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று வேலை வாய்ப்பு உருவாகும்.

கருப்பு கயிறு- கருப்பு வண்ண காலனி - கருப்பு வண்ண டயர்-  இதுபோன்றவற்றை பாவிக்கும்போது.. உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஜீவன காரகன் என போற்றப்படும் சனி பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று, உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54
news-image

பண வரவு எம்முடைய வீட்டில் நிரந்தரமாக...

2024-08-26 17:26:34
news-image

குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைப்பதற்கான எளிய...

2024-08-24 15:55:33
news-image

வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சித்தர்கள் வழங்கிய...

2024-08-23 20:09:49
news-image

சகல கர்மா தோஷங்களையும் நீக்கும் எளிய...

2024-08-21 17:45:17