இயக்குநராகவும், தென்னிந்திய மொழிகளின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும் சமுத்திரக்கனி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'திரு. மாணிக்கம்' எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
கதாசிரியரும், இயக்குநருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'திரு. மாணிக்கம்' எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி , பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த் , வடிவுக்கரசி, சாம்ஸ், கிரேஸி, ஸ்ரீ மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம் . சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஜி பி ஆர் கே சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி பி ரேகா ரவிக்குமார்- சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி - ராஜா செந்தில் - ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகரும், சமுத்திரக்கனியின் நண்பருமான சசிகுமாரின் பின்னணி குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், 'தவறெனின் வலியது வீழும்... சரியெனின் எளியதும் வாழும்' என்ற வாசகம் இடம் பிடித்திருப்பதால்... ரசிகர்களுக்கு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM