“த ஹெவன் ஸ்டுடியோ” அதன் சமீபத்திய தயாரிப்பான "கங்கா" என்ற காணொளியை நாளை ஆகஸ்ட் 4ஆம் திகதி திரையிடவுள்ளது.
இந்த காணொளி பரதத்தின் வெளிப்படையான கலை மூலம் சித்திரிக்கப்பட்ட தண்ணீரின் அழகு மற்றும் அதன் மாசுபாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
தங்கவேல் அருள் பிரசாந்த் இயக்கி, ஒளிப்பதிவு செய்த “கங்கா” தனித்துவமான காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதையை முன்னிறுத்துகிறது.
இந்நாட்டு நடிகர்களோடு நடனக் கலைஞர் சஞ்சயாவின் விதிவிலக்கான நடிப்புத்திறமை இந்த காணொளியில் வெளிப்படுவதை காண முடியும்.
இணை ஒளிப்பதிவாளர்கள் அனிசுதன் மற்றும் அரவிந்த், அழகுக்கலை நிபுணரான மோனிகா ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு காட்சியும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சிஜி மற்றும் வீடியோ எடிட்டர் தங்கவேல் சதீஷின் திறமையால் படத்தின் அழுத்தமான காட்சிகள் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த காணொளிக்கான உணர்வுபூர்வமான இசையினை அபிஷேக் அமைத்துள்ளார்.
ஸ்ரீஷின் குரல்வழி கதைசொல்லலில் ஓர் அதிர்வலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தயாலினியின் பாடல் வரிகள் கருப்பொருள் தாக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.
இதன் காட்சி தொனியை நிறுவுவதில் ஜூட்டின் கலைப் படைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
‘கங்கை’ நீரின் உள்ளார்ந்த அழகுக்கும் அதன் மாசுபாட்டின் விளைவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துரைப்பதன் மூலம் சிந்தனையை தூண்டி மாற்றத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆழமான கலை வெளிப்பாட்டை அனுபவிக்கவும், நமது இயற்கை வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி சிந்திக்கவும் பார்வையாளர்களை ஹெவன் ஸ்டுடியோ அழைக்கிறது.
ஹெவன் ஸ்டுடியோவின் முகப்புத்தகப் பக்கத்தில் இந்த காணொளியை பற்றிய மேலதிக தகவல்களையும் “கங்கா” காணொளியையும் பார்வையிட முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM