கடந்த ஆண்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 42.76 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
இதற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகையும் மற்றும் கடவு சீட்டு வழங்கல் செயற்பாடும் காரணமாகும்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடந்த ஆண்டில் 28.1 பில்லியன் ரூபாவை வருமானத்தை இலக்காக கொண்டிருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் ஈட்டிய 23.83 பில்லியன் ரூபாய் வருமானத்தை விட 42.76 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
அதன்படி, இலத்திரனியல் பயண அங்கீகாரத்தின் (ETA) மூலம் 17.74 பில்லியன் ரூபாவும், கடவுசீட்டு வழங்குதல் மற்றும் திருத்தம் மூலம் 12.51 பில்லியன் ரூபாவும், விசா வழங்கல்/நீடிப்பு மூலம் 7.09 ரூபாவும், தூதரகங்கள் ஊடான கடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகள் மூலம் 3.82 பில்லியன் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தில் 910,582 கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 911,689 கடவுச்சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு பிராந்திய அலுவலகங்கள் 191,557 கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதில், 2023 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் பிராந்திய அலுவலகங்களின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர்வவுனியா அலுவலகம் 56,261 கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 2.94 மில்லியன் கடவுசீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM