மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று சனிக்கிழமை (03) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆலய குரு இரத்திபூரண சுதாகர குருக்கள் தலைமையில் இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்துக்கு விசேட பூஜைகளை தொடர்ந்து, பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதி உலா ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயர், தேரில் ஆரோகணிக்க, அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இராமபிரான் வழிபட்ட ஆலயம் என்றும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக் கொண்ட ஆலயம் என்றும் மாமாங்கேஸ்வரர் ஆலயம் பெருமை பெற்று விளங்குகிறது.
இரத பவனியை தொடர்ந்து, நாளை (04) நண்பகல் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM