ஹிக்கடுவை கடற்கரையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அரிய வகை வலசை பறவையொன்று வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அத்திடிய பறவைகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த பறவை குறித்து ஹிக்கடுவை தேசிய பூங்காவின் பாதுகாவலர் அசங்க குணவர்தன தெரிவித்துள்ளதாவது,
இந்த பறவை கிழக்கு ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு மேற்கே உள்ள வெப்பமண்டலப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஷீர்வொட்டர் (Shearwater) பறவை இனமாகும்.
வெப்பமண்டலப் பறவை மனித வாழ்விடங்களிலிருந்து விலகி வாழ்வதோடு, பாறைப் பிளவுகள் அல்லது மணல் மேடு குழிகளில் முட்டையிடும்.
இந்த பறவையினம் குஞ்சு பொரித்த பிறகு, குஞ்சுகள் பறக்கும் வரை நீண்ட காலத்துக்கு அவற்றை பாதுகாக்கும்.
நீண்டதூரம் பறக்கும் திறன் கொண்ட ஷீர்வொட்டர் பறவைகள் கடலில் மிதக்கும் பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படுகின்றன.
ஹிக்கடுவை கடற்கரையில் காணப்பட்ட இந்த பறவையும் பிளாஸ்டிக், பொலித்தீன் குப்பைகளை உட்கொண்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பறக்க முடியாமல் இருந்தது.
தென் பகுதியில் ஷீர்வொட்டர் தென்பட்டது இதுவே முதல் தடவை என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM