தெஹிவளை பகுதியில் ஹோட்டலொன்றில் 3வது மாடியில் நேற்றிரவு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேச மக்கள்,பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தீயினால் ஹோட்டலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படாமை குறிப்பிடத்தக்கது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.