இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த மீனவரின் சடலம் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது !

Published By: Digital Desk 3

03 Aug, 2024 | 10:40 AM
image

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற விசைப்படகு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களை கைதுசெய்ய இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட விபத்தையடுத்து மீன்பிடி படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (64) என்ற மீனவர் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளார். 

மேலும், முத்து முணியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (02) மதியம் முத்து முணியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் வழக்குப் பதிவு செய்யப்படாது எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.  

மேலும், இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகொப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் மற்றும் மலைச்சாமியின் உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைக்கப்பட்டது. 

அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட இந்திய கடற்படை வீரர்கள்  இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட  மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மலைச்சாமியின் உடல் ஆம்பியூலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

கடலில் காணாமல் போன மீனவர் ராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்து வந்த மீனவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21