பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் இன்று சனிக்கிழமை (03) 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என்று ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 6.8 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதோடு, சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், நிலநடுக்கத்துக்குப் பிந்திய நிலஅதிர்வுகள் ஏற்படக்கூடும் என பிலிப்பைன்ஸ் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் பசிபிக் பெருங்கடலின் ‛ரிங் ஆஃப் ஃபயர்' எனும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM