ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை ஹொப்டன் பழைய தொழிற்சாலை ” பி “ பிரிவை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொழும்பு ஆமர் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு தொழிலுக்கு சென்றதாகவும் நேற்று காலை விடுமுறையில் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதுளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யின் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM