வவுனியா மன்னார்வீதி பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து வெள்ளிக்கிழமை (2) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
பட்டானிச்சூர் பகுதியில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த இரண்டு மோட்டார்சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் கடுமையான சேதமடைந்ததுடன் அதில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாளம்பைக்குளம்,தோணிக்கல்,யாழ்வீதிகளை சேர்ந்த 27,18,17 வயதுகளையுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை வவுனியா நகரப்பகுதியில் மன்னார்வீதி வேப்பங்குளம்,பட்டாணிச்சூர்,வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மிகவேகமாக ஆபத்தான முறையில் அதிக சத்தத்துடன் மோட்டார்சைக்கிள்களை ஓட்டிச்செல்லும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது.இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன், ஏனைய பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்த விடயத்தில் பொலிசார் அசமந்தமாக செயற்ப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM