(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரண்டு அணிகளுக்கும் இடையில் சமநிலையில் முடிவடைந்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்ததால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதற்கு முன்னர் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் அடிலெய்டில் 2012 பெப்ரவரியில் நடைபெற்ற முத்தரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 50 ஓவர்களில் 8 விக்டெக்ளை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்த ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றம் அடைந்த இலங்கை, அரைவாசிக்கும் மேற்பட்ட ஓவர்கள் வீப்பட்ட நிலையில் 5 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
முன்வரிசையில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் இளம் வீரர் துனித் வெல்லாலகே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
துனித் வெல்லாலகே 6ஆவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 41 ஓட்டங்களையும் 7ஆவது விக்கெட்டில் வனிந்து ஹசரங்கவுடன் 36 ஓட்டங்களையும் 8ஆவது விக்கெட்டில் அக்கில தனஞ்செயவுடன் 46 ஓட்டங்களையும் பகிர்ந்ததால் இலங்கை அணி 230 ஓட்டங்களை மொத்தமாக பெற்றது.
ஜனித் லியனகே 20 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களையும் அக்கில தனஞ்சய 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் கைப்பற்றினர்.
231 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 47.5 ஓவர்களில் இழந்து 230 ஓட்டங்களைப் பெற ஆட்டம சமநிலையில் முடிவடைந்தது.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 52 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் இருவரையும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்கச் செய்தார்.
ஷுப்மான் கில் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.
விராத் கோஹ்லி (24), ஷ்ரேயாஸ் ஐயர் (23) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததும் இலங்கை அணி உற்சாகம் அடைந்தது.
எனினும் கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும்; நிதானத்துட னும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ராகுல் 31 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.
மொத்த எண்ணிக்கை 197 ஓட்டங்களாக இருந்தபோது அக்சார் பட்டேல் (33) வெளியேறினார்.
கடைசியில் ஷிவம் டுபே 2 சிக்ஸ்களை விளாசி இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்த போதிலும் அவரை அசலன்க 25 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்ததும் இந்தியாவின் வெற்றிக் கனவு கலைந்து
பந்துவீச்சில் சரித் அசலன்க 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM