குருநகரில் “களம் தந்த களங்கம்” தென்மோடிக்கூத்து 

02 Aug, 2024 | 07:40 PM
image

குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக்கழகம் நடத்திய குருநகரின் மூத்த குருக்கள் கௌரவிப்பு நிகழ்வும் “களம் தந்த களங்கம்” தென்மோடிக்கூத்து நிகழ்வும் கடந்த திங்கட்கிழமை (29) மாலை 6.30 மணியளவில் குருநகர் கலையரங்கில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் தலைமையிலும் குருநகர் இளைஞர் கலைக்கழக நிர்வாகி கிளமென்ட் நெல்சனின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநகரை சேர்ந்த அருட்தந்தையர்களான அருட்பணி ஜெயசீலன் அடிகளார், அருட்பணி ஒல்பன் இராஜசிங்கம் அடிகளார், அருட்பணி இருதயதாஸ் அடிகளார் ஆகியோரும், குருநகரை சேர்ந்த கலைஞர்களான கலையார்வன், குருசுமுத்து இராயப்பு, கலைஞானச்செல்வன் அரியநாயகம் அன்றுயூலியஸ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து குருநகர் இளைஞர் கலைக்கழகம் தயாரித்து வழங்கிய “களம் தந்த களங்கம்” தென்மோடிக்கூத்து மேடையேற்றப்பட்டது. இக்கூத்து கலையார்வன் கு. இராயப்புவின் எழுத்துருவிலும் அ.அன்றுயூலியஸின்  நெறியாள்கையிலும் நடத்தப்பட்டது.

குருநகரை சேர்ந்த இளம் கலைஞர்கள் மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்கள் இக்கூத்தில் நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றனர். 

2 மணித்தியாலங்களை கொண்டு புனித யாகப்பரின் புதுமையினை அடிப்படையாக கொண்ட கதையாக இக்கூத்து அமைந்தது.

கடினமான கூத்துக்கலையினை எதிர்கால சந்ததிக்கு கடத்தும் இவர்களது பணிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14
news-image

பிலியந்தலை விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்...

2024-09-07 14:19:14
news-image

"எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவெட் லிமிட்டெட்...

2024-09-05 18:08:24
news-image

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்...

2024-09-04 18:02:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

2024-09-04 17:37:08
news-image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் ...

2024-09-04 17:27:35
news-image

அகஸ்டினா அபிக்கா டியானாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-09-05 17:10:53
news-image

நல்லூர் கொடியிறக்கம்!

2024-09-03 12:28:17
news-image

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கொடியேற்றம்

2024-09-02 18:56:34
news-image

புதிய அலை கலை வட்டத்தின் தொடர்...

2024-09-02 18:41:27
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 39...

2024-09-02 17:32:39