கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (2) மட்டக்களப்பில் ஆரம்பமானதை தொடர்ந்து, நாளையும் (3)நடைபெறும்.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 1000க்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் வெபர் மைதானத்தை நோக்கி நடைபவணியாக சென்றனர்.
தொடர்ந்து, வெபர் மைதானத்தில் இலங்கை, இந்தியா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் கலைஞர்களின் வருகையுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு கலைவிழா ஆரம்பமானது.
இவ்விழாவில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெற்றதை நினைவூட்டும் முத்திரையும் வெளியிடப்பட்டு அதன் முதல் பிரதி ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சரவணனுக்கும் ஏனைய அழைப்பாளர்களுக்கும் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், இந்நிகழ்வு தொடர்பான விசேட மலர் வெளியீடும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன.
இதன் தொடர்ச்சியாக நாளை (3) இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM