ஜனவசியம் அதிகரித்து, விற்பனை பெருகுவதற்கான எளிய பரிகாரம்..!

02 Aug, 2024 | 05:37 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் நண்பர்களிடமோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமோ அல்லது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்காக செயல்படும் அறக்கட்டளைகளிடமோ குறைந்த வட்டியில் கடனை வாங்கி விற்பனை நிலையத்தை தொடங்கி இருப்பார்கள்.

தொடக்கத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து, அதனூடாக வியாபாரமும் செழித்து, பணப்புழக்கம் தாராளமாக ஏற்பட்டிருக்கும். இதன் காரணமாக அவர்கள் கடனுக்கான வட்டியை தவணை முறையில் மகிழ்ச்சியுடன் செலுத்தி, மீதமிருக்கும் லாபத்தை வைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருப்பர். ஆனால் நாளாந்தம் வாடிக்கையாளர்கள் வருகை தரும் விற்பனை நிலையத்தில் விற்பனை என்பது சீராக இருக்காது என்பது நடைமுறை.

சிலருக்கு இதன் காரணமாகவே நாளடைவில் வியாபாரம் மந்தமடையும். இந்த தருணத்தில் வியாபாரத்தில் இருக்கும் வியாபாரிகள் சோதிட நிபுணர்களையோ  ஆன்மீக பெரியோர்களையோ... அணுகி வியாபாரம் மீண்டும் செழித்து ஓங்க வழிகாட்டுங்கள் என கேட்டுக் கொள்வர். இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். 

இதற்கு தேவையான பொருட்கள் கொட்டைப் பாக்கு மற்றும் தாமிர நாணயம் 

அமாவாசை தினத்தன்று மாலை வேளையில் அபிஜித் முகூர்த்த தருணம் என குறிப்பிடப்படும் சூரியன் மறைவுக்கு முன்னதான 14 நிமிடம் பின்னதான 14 நிமிடம் ஆகிய தருணத்தை தெரிவு செய்து, உங்கள் வீடு அல்லது விற்பனை நிலையத்திற்கு அருகில் இருக்கும் அரச மரத்தருகே சென்று,  நீங்கள் எடுத்துச் சென்ற ஒரு கொட்டைப்பாக்கு மற்றும் ஒரு தாமிர நாணயத்தை கையில் வைத்துக்கொண்டு, 'மீண்டும் பழைய படி வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக ஏற்பட வேண்டும்.

அதனுடாக வியாபாரம் செழித்து வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்' என ஒருமுகமான பிரார்த்தனை செய்து, கையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் அரச மரத்து அடியில் வைத்து விட வேண்டும்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்துவிடலாம். அமாவாசை நாளை தொடர்ந்து வரும் திங்கட்கிழமையில் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக சென்று, கொட்டை பாக்கையும், தாமிர நாணத்தையும் எந்த அரச மரத்தின் அடியில் வைத்தீர்களோ...!

அந்த அரச மரத்திலிருந்து அரச இலை ஒன்றை சேகரிக்க வேண்டும். கீழே விழுந்த இலையை சேகரித்தாலும் பரவாயில்லை ஆனால் மரத்திலிருந்து புதிதாக ஒரு இலையை பறிக்கிறீர்கள் என்றால்... பறிப்பதற்கும் முன் 'சிவாயநம' என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு, ஒரே ஒரு இலையை மட்டும் பறித்து கொண்டு, அதனை நீரால் சுத்தப்படுத்தி, உங்களது விற்பனை நிலையத்தில் உள்ள பண பெட்டியில் வைத்து விடுங்கள்.

இந்த எளிய முறையை தொடர்ச்சியாக ஏழு முதல் ஒன்பது அமாவாசை வரை மேற்கொள்ளும் போது.. உங்களுடைய விற்பனை நிலையத்தில் மீண்டும் நீங்கள் நினைத்தபடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உங்கள் வியாபாரம் செழித்து, அதனூடாக லாபம் வருவதை அனுபவத்தில் காணலாம். 

தொகுப்பு ; சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54
news-image

பண வரவு எம்முடைய வீட்டில் நிரந்தரமாக...

2024-08-26 17:26:34
news-image

குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைப்பதற்கான எளிய...

2024-08-24 15:55:33
news-image

வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சித்தர்கள் வழங்கிய...

2024-08-23 20:09:49
news-image

சகல கர்மா தோஷங்களையும் நீக்கும் எளிய...

2024-08-21 17:45:17