இலஞ்ச ஊழல் தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சரின் செயலாளர், இணைப்பாளர் இருவருக்கும் விளக்கமறியல்

02 Aug, 2024 | 04:34 PM
image

மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் கொழும்பு நீதிமன்றில் விண்ணப்பிக்குமாறும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (2) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டட ஒப்பந்தகாரர் ஒருவரிடம்  15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரை நேற்று வியாழக்கிழமை (1) கல்லடி கடற்கரையில் மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர், கைதான இருவரையும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்  இருவரையும் கொழும்பு நீதிமன்றில் விண்ணப்பிக்குமாறும் அவ்விருவரையும் இங்கிருந்து கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கு கட்டளையிட்டு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03