அமெரிக்க ரஸ்ய கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையான அமெரிக்கர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துள்ளனர்.
வோல்ஸ்ரீட் பத்திரிகையாளர் கேர்ஸ்க்கோவிச் உட்பட 3 அமெரிக்கர்கள் ரஸ்ய சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் இதற்கு பதிலாக 8 ரஸ்யர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது.
பனிப்போர் காலத்தின் பின்னர் இரு நாடுகளிற்கும் இடையில் இடம்பெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியின் விமானதளமொன்றில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்களுடன் விமானம் மேரிலாண்டில் உள்ள கூட்டு தளத்தில் இறங்கியவேளை அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்பினர்.
அமெரிக்க ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் மூன்று அமெரிக்கர்களையும் வரவேற்றனர்.
விடுதலை செய்யப்பட்ட மூவரும் புகைப்படங்களை எடுத்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
முன்னதாக அங்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி மூவரினதும் கொடுமையான காலங்கள் முடிவிற்கு வந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.
இவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட அமெரிக்காவின் நேசநாடுகளிற்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
கைதிகளை விடுவி;ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 18 மாதங்களாக இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
பேர்லின் பார்க்கில் கொலை முயற்சிக்காக ஜேர்மனியில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் வடிம் ரசிகோ என்பவரை விடுதலை செய்யவேண்டும் என ரஸ்யா வலியுறுத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏழு நாடுகளை சேர்ந்த 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என துருக்கி தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM