கொள்கைகளில் ஏற்படும் சறுக்கல்கள் பொருளாதார மீட்சியை பாதிக்கலாம் ; புதிய வரிவிலக்கினை அரசாங்கம் வழங்ககூடாது - சர்வதேச நாணயநிதியம்

02 Aug, 2024 | 03:19 PM
image

இலங்கை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் பாராட்டத்தக்க விளைவுகளை தருக்கின்றது என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று காலாண்டு கால வளர்ச்சியை காண்பிக்கின்றது என தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டின் முதல்காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.34 ஆக காணப்பட்டது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இக்கட்டான கட்டத்திலிருந்து இலங்கை கத்தி முனையில் மீண்டும் வரும் இந்த தருணத்தில் முன்னெடுக்கப்படும் சீர்திருதங்களின் வேகத்தினை தொடர்ந்து பேணுவதும் அனைத்து வேலைதிட்டம் தொடர்பான அர்ப்பணிப்புகளையும் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்துவதும் கடினமான முயற்சிகள் மூலம் பெறப்பட்ட பொருளாதார வெற்றிகளை தக்கவைப்பதற்கு அவசியமான விடயம் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

நிதிவருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகள் அவசியம் என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் 2025 வரவு செலவுதிட்டத்தில் பொருத்தமான வருவாய் நடவடிக்கைகள் காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கடன் நிலைதத்தன்மையை அடைவதற்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளப்பெறுவதற்கும் எஞ்சியுள்ள நடவடிக்கைகளிற்கு விரைவாக தீர்வை காணவேண்டும் என நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்  என சர்வதேசநாணயநிதியத்தின் இலங்கைகக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர்  பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய கடன்மறுசீரமைப்பு முயற்சிகளிற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்,என மேலும் தெரிவித்துள்ள அவர் அதிகாரிகள் கடன்கள் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு மற்றும் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ குழு சீனாவின் எக்சிம் வங்கி ஆகியவற்றுடன் உடன்படிக்கைகளை இறுதிசெய்தமை மைல்கற்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் மத்தியவங்கியின் ஐந்துசதவீதத்திற்கும் குறைவானதாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் வட்டிவிகிதங்கள் குறையத்தொடங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய வரிவிலக்குகளை தவிர்ப்பது ஊழல் ஆபத்துக்களை குறைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17