சர்வதேச அரங்கில் அறிமுகமானார் மடவளை புதல்வன் மொஹமத் ஷிராஸ்

02 Aug, 2024 | 03:35 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமான நிலையில் கண்டி மடவலையைச் சேர்ந்த மொஹமத் ஷிராஸ் அறிமுக வீரராக இடம்பெறுகிறார். 

இலங்கை அணியில் இடம்பெற்றுவந்த முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஐவர் உபாதை மற்றும் சுகவீனம் காரணமாக ஒய்வுபெற்றுவருவதால் மொஹமத் ஷிராஸ், ஏஷான் மாலிங்க ஆகியோர் முதல் தடவையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்த இருவரில் கண்டி மடவளை மதீன மத்திய கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்பாது பி.ஆர்.சி.க்காக முதல்தர போட்டிகளில் விளையாடி வருபவருமான மொஹமத் ஷிராஸ், 119 முவகையான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 228 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். 

இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிவருகிறது. 

அணிகள்

இலங்கை: சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, அக்கில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ,மொஹமத் ஷிராஸ்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வொஷிங்டன் சுந்தர், ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமத் சிராஜ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-16 13:57:56
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56