ஜனாதிபதி - சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் சந்திப்பு ; 3 ஆம் கட்ட மீளாய்வை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்ய கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வு!

02 Aug, 2024 | 03:03 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதிக்கும், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் 3 ஆம் கட்ட மீளாய்வை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையினால் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் நாட்டின் பொருளாதாரத்தில் அடையப்பட்டுள்ள சாதக மாற்றங்கள் மற்றும் நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பில் ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கொழும்புக்கு வருகைதந்துள்ளனர். 

இவ்விஜயத்தின்போது அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான பிரதிநிதிகள், வர்த்தகத்துறைசார் கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர். 

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதிக்கும், பீற்றர் ப்ரூவர் தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

இச்சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட நிதிவசதிச்செயற்திட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய 4 ஆம் கட்ட நிதி உரிய காலப்பகுதியில் விடுவிக்கப்படுவதற்கு நாணய நிதியத்தின் 3 ஆம் கட்ட மீளாய்வை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யவேண்டும் எனவும், அதனை முன்னிறுத்தி மேலதிக கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்களை அடையாளங்காண்பதில் விசேட கவனம்செலுத்தப்பட்டது எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

அதுமாத்திரமன்றி மிகக்குறுகிய காலப்பகுதியில் வலுவான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துகொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட தலைமைத்துவத்தை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் பாராட்டியதாகவும், அத்தோடு இச்சந்திப்பில் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் நாட்டை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி முன்கொண்டுசெல்வதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைத் தான் கொண்டிருப்பதாக இதன்போது ஜனாதிபதி சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ;...

2024-09-18 16:51:03
news-image

வீணடிக்காமல் வாக்குகளை பயன்படுத்துங்கள் - சஜித்  

2024-09-18 16:47:17
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும்...

2024-09-18 16:42:11
news-image

வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை எமது...

2024-09-18 16:11:58
news-image

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம்...

2024-09-18 16:29:36
news-image

வாக்களிப்பது எப்படி ?

2024-09-18 16:22:03
news-image

மாத்தறையில் 10 வாள்களுடன் ஒருவர் கைது

2024-09-18 16:05:42
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எக்கானமி வகுப்பில் உணவை...

2024-09-18 16:47:43
news-image

பாதாள உலக கும்பல் தலைவரின் முக்கிய...

2024-09-18 16:17:47
news-image

தணமல்விலவில் 3,570 கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-09-18 15:37:36
news-image

விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் மக்கள்...

2024-09-18 15:08:39
news-image

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை :...

2024-09-18 13:49:11