ஒலிம்பிக் 800 மீற்றர் தகுதிகாண் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி இன்று பங்குபற்றவுள்ளார்!

02 Aug, 2024 | 12:24 PM
image

(நெவில் அன்தனி)

நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 128 வருட வரலாற்றில் முதல் தடவையாக தெரிவுசெய்யப்பட்ட குறுந்தூர மற்றும் மத்திய தூர ஓட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுகளில் தோல்வி அடைந்தும் அதிசிறந்த நேரப் பெறுதிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க சர்வதேச ஒலிம்பிக் குழுவும் வேர்ல்ட் அத்லெட்டிக்ஸும் (உலக மெய்வல்லுநர் சங்கம்) முன்வந்துள்ளன. 

இந் நிலையில் இலங்கையின் இளம் நட்சத்திர ஓட்ட வீராங்கனை தருஷி கருணராட்ன இன்று (02) இரவு நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ளார். 

ஆண், பெண் இருபாலாருக்குமான 200 மீற்றர் முதல் 1500 மீற்றர் வரையான ஓட்டப் போட்டிகளில் மாத்திரம் தோல்வி அடைபவர்களுக்கு Repechage (ரெப்பேஷாஸ்) எனும் முறைமை மூலம் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 

தகுதிகாண் சுற்றிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறத் தவறும் மெய்வல்லுநர்களில் அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்வோருக்கு ரெப்பேஷாஸ் என பிரெஞ்சு மொழியில் கூறப்படும் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 

தகுதிகாண் சுற்றிலிருந்து நேரடியாக அரை இறுதிக்கு தகுதிபெறத் தவறினால் இந்த வாய்ப்பை இலங்கை மெய்வல்லுநர்களான தருஷி கருணராட்னவும் அருண தர்ஷனவும் அதிகபட்சம் பன்படுத்தி  அரை இறுதிக்கு  முன்னேற முயற்சிப்பார்கள் என அவர்களது பயிற்றநர்களான சுசன்த பெர்னாண்டோவும் அசன்க ராஜகருணவும் தெரிவித்தனர். 

பாரிஸில் இருக்கும் அவர்களுடன் வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டபோதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

'எமது மெய்வல்லுநர்கள் இருவரும் அதிசிறந்த நேரப்பெறுதிகளைப் பதிவுசெய்யும் குறிக்கோளுடன் இங்கு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளுடன் பயிற்சிகளை அளித்து வருகிறோம்' என அவர்கள் இருவரும் குறிப்பிட்டனர். 

மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானதுடன் இலங்கையர்களில் முதலாவதாக தருஷி கருணாரட்ன இன்று வெள்ளிக்கிழமை (02) இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகும் பெண்களுக்கான தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ளார். 

6 கட்டங்களைக் கொண்ட தகுதிகாண் சுற்றில் தலா 8 வீராங்கனைகள் வீதம் 48 வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். ஒவ்வொரு தகுதிகாண் சுற்றிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 18 வீராங்கனைகள் அரை இறுதியில் பங்குபற்ற நேரடி தகதிபெறுவர். அதிசிறந்த நேரப்பெறுதிகளுடன் தோல்வி அடைபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது வாய்ப்பிலிருந்து மற்றைய 6 பேர் அரை இறுதிக்கு தெரிவாவர். 

800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷியின் அதிசிறந்த நேரப் பெறுதி 2 நிமிடங்கள் 00.66 செக்கன்களாகும். ஆனால், மிக அண்மையில் தியகமவில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் அவர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 04.22 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தார். 

எவ்வாறாயினும் தனது சொந்த தேசிய சாதனையை பாரிஸ் ஒலிம்பிக்கில் புதுப்பிக்க முயற்சிப்பதாக தருஷி தெரிவித்துள்ளார். 

இது இவ்வாறிருக்க, ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் சுற்றில் அருண தர்ஷனவும் ஆகஸ்ட் 7ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் டில்ஹானி லேக்கம்கேயும் பங்குபற்றவுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள்...

2024-09-08 23:56:35
news-image

அமெரிக்க பகிரங்க மகளிர் ஒற்றையர் சம்பியன்...

2024-09-08 21:55:24
news-image

பராலிம்பிக் F63 குண்டு எறிதலில் இலங்கையின்...

2024-09-08 06:54:56
news-image

மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன்...

2024-09-07 23:02:17
news-image

ஒல்லி போப் ஆபார சதம், டக்கட்...

2024-09-06 23:50:06
news-image

மகாஜனாவுக்கும் ஸ்கந்தவரோதயவுக்கும் இடையிலான 22ஆவது வருடாந்த...

2024-09-06 19:46:33
news-image

வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா...

2024-09-06 18:27:27
news-image

பெண்களுக்கான பராலிம்பிக் நீளம் பாய்தலில் இலங்கையின்...

2024-09-06 16:39:22
news-image

இலங்கை - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்...

2024-09-06 16:03:44
news-image

நியூஸிலாந்தின் சுழல்பந்துவீச்சு பயிற்றுநரானார் இலங்கையின் ரங்கன...

2024-09-06 14:00:55
news-image

மகாஜனா - ஸ்கந்தவரோதயா மோதும் யாழ்....

2024-09-06 12:49:53
news-image

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை...

2024-09-06 06:22:47