(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (02) நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
பகல் இரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் நடைபெற்ற ரி20 கிரிக்கெட் தொடரில் மத்திய வரிசை வீரர்களின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற துடுப்பாட்டம் காரணமாக முற்றுமுழுதாகத் தோல்வி அடைந்த இலங்கை, ஒருநாள் தொடரில் வெற்றிபெறும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.
இலங்கை அணியில் இடம்பெற்றுவந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஐவர் உபாதை மற்றும் சுகவீனம் காரணமாக ஓய்வுபெற்றுவருவதால் மொஹமத் ஷிராஸ், ஏஷான் மாலிங்க ஆகியோர் முதல் தடவையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கண்டி, மடவளை மதீனா மத்திய கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்பாது பி.ஆர்.சி.க்காக முதல்தர போட்டிகளில் விளையாடி வருபவருமான மொஹமத் ஷிராஸ், 119 முவகையான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 248 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை, அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய ஒருநாள் அணியில் இணைந்துகொண்டுள்ளனர். அத்துடன் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா முதல் தடவையாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வும் அணியில் இடம்பெறுகிறார்.
இலங்கையும் இந்தியாவும் இதுவரை விளையாடியுள்ள 168 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 99 - 57 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 11 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
இரண்டு அணிகளும் கடந்த வருடம் விளையாடிய கடைசி 5 போட்டிகளில் இந்தியா மிக இலகுவாக வெற்றிபெற்றதுடன் அவற்றில் 3 போட்டிகளில் இலங்கை 55 ஓட்டங்களுக்கும், 50 ஓட்டங்களுக்கும் 73 ஓட்டங்களுக்கும் சுருண்டிருந்தது.
இலங்கை அணியில் உள்ள ஒரு பெருங்குறை என்னவெனில் துடுப்பாட்ட வீரர்கள் சரியான அடி தெரிவுகளை பின்பற்றாததுதான். தரையோடு அடிக்கவேண்டிய பந்துகளை அநாவசியமாக, கவனக்குறைவுடன் விசுக்கி அடிக்க முயற்சித்து விக்கெட்களைத் தாரைவார்க்கின்றனர். இந்தத் தவறுகளை வீரர்கள் திருத்திக்கொண்டு பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடினால் இலங்கைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அணிகள்
இலங்கை: சரித் அசலன்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம, அக்கில தனஞ்சய, சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, மொஹமத் ஷிராஸ், ஏஷான் மாலிங்க.
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷ்ரேயாஸ் ஐயர், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், ரியான் பரக், கே.எல். ராகுல், ஷுப்மான் கில், ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், கலீல் அஹ்மத், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM