இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் 20 2024 இல் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தவேளை இந்திய பிரதமரின் விஜயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி கலந்துகொண்டவேளை இதுகுறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இலங்கையில் கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து நிச்சயமற்ற நிலையேற்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 ம் திகதி தேர்தல் குறித்து கவனம் செலுத்துவதால் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலைவர்களுடனான ஈடாட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளது.
இந்த தருணத்தில் எந்த வெளிநாட்டு தலைவரையும் உபசரிக்கும் நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர்களினது இலங்கை விஜயமும் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM