லாவகமாக ஒரு விளையாட்டு! : வைரலான புகைப்படம் - என்ன காரணம்?

02 Aug, 2024 | 10:15 AM
image

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துருக்கி வீரரான 51 வயதுடைய யூசுப் டிகெக்கின் (Yusuf Dikec) புகைப்படமும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் விழாவில் நாளுக்கு நாள் ஒவ்வொரு சுவாரஸ்ய சம்பவங்களும் செய்திகளும் இடம்பெற்று வரும் நிலையில், அவை இணையத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.

அவ்வாறு இணையத்தை ஆக்கிரமித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இடம்பெற்ற சம்பவம்.

33ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை (26) முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இதில், கடந்த புதன்கிழமை துப்பாக்கி சுடுதல் 10 மீற்றர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் செர்பியாவின் ஜோரானா அருனோவிச் - டாமிர் மைக் இணை துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணையை 16-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. 

தோல்வியுற்ற துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணைக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

இதே பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் ஜின் ஓ யே - வோன்ஹோ லீ இணையை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.

இந்நிலையில், துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணை ஒலிம்பிக் தங்கம் வெல்லவில்லை என்றாலும், யூசுப் டிகெக் தனது துப்பாக்கி சுடுதல் முறையால் அனைவரையும் ஈர்த்துள்ளார். இது சமூக வலைத்தள பக்கத்தில் அதிக கவனம் பெற்றுள்ளதுடன் அவரது துப்பாக்கி சுடும் முறை தொடர்பான பதிவுகளும் காணொளிகளும் இணையத்தை கலக்கி வருகின்றன. 

தனது 5ஆவது ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டுள்ள துருக்கியின் துப்பாக்கி சுடுதல் வீரர் யூசுப் டிகெக் பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். 51 வயதான யூசுப் டிகெக், இந்தப் போட்டியின்போது, ஏனைய வீரர்கள் போல் இலக்கை துல்லியமாக பார்க்க உதவும் லென்ஸ், சத்தம் குறைவாக்க உதவும் ஹெட்போன் போன்ற எந்த உபகரணங்களையும் அவர் அணியவில்லை. வழக்கமாக காலையில் நடைபயணம் செல்லும் ஒருவர் போல் சாதாரணமாக காற்சட்டை, ரிசேர்ட் அணிந்துகொண்டு தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் களமிறங்கி தனது இணையுடன் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரது இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கியின் கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள கோக்சுன் மாவட்டத்தில் உள்ள தசோலுக் கிராமத்தில் பிறந்த யூசுப் டிகெக்,  2011ஆம் ஆண்டு தனது விளையாட்டு துப்பாக்கி சுடுதல் மூலம் துப்பாக்கி சுடுதல் போட்டியை ஆரம்பித்தார். இவர், 25 மீ சென்டர்-ஃபயர் பிஸ்டல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

2006இல் சி.ஐ.எஸ்.எம். மிலிட்டரி உலக சம்பியன்ஷிப்பில் 597 புள்ளிகளைப் பெற்றார்.

அத்துடன் 2013ஆம் ஆண்டில் டிகெக் 25 மீ ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மற்றும் 25 மீ சென்டர்-ஃபயர் பிஸ்டல் போட்டிகளில் இரட்டை தங்கப் பதக்கம் வென்றார். 

2024இல் அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-16 13:57:56
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56