ஒருநாள் தொடரின்போது வீரர்களை உற்சாப்படுத்த வருமாறு சனத் அழைப்பு; அழுத்தங்களை வீரர்கள் சமாளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தல்

02 Aug, 2024 | 09:56 AM
image

(நெவில் அன்தனி) 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகவுகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இலங்கை அணிக்கு உற்சாகமூட்டி ஆதரவு வழங்க உள்ளூர் இரசிகர்களைத் திரண்டு வருமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுநர்  சனத் ஜயசூரிய  அழைப்பு விடுத்தார். 

இற்றைக்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் தங்களது அர்ப்பணிப்புத்தன்மை, ஆட்டத்திறன் ஆகியவற்றின் மூலம் இரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து கிரிக்கெட்டையும் கிரிக்கெட் வீரர்களையும்  நேசிக்கும் சூழ்நிலையை உருவாக்கியதாகவும் அதேபோன்று சமகால வீரர்களும் அர்ப்பணிப்புடன் விளையாடி இரசிர்களைக் கவரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

பல்லேகலையில் நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை 3 - 0 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியா முழுமையாக வெற்றிகொண்டிருந்தது. அந்த மூன்று போட்டிகளிலும் மத்திய வரிசை துடுப்பாட்டம் கிடுகிடுவென சரிந்ததால் இலங்கை தோல்விகளைத் தழுவ நேரிட்டது.

கடைசிப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 9 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டதுடன் 6 விக்கெட்கள் மீதம் இருந்தது. ஆனால், சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் முதல் தடவையாக பந்துவீசிய ரின்கு சிங் (19ஆவது ஓவர்), சூரியகுமார் யாதவ் (20ஆவது ஓவர்) ஆகிய இருவரும் முறையே 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தி ஆட்டத்ததை சமநிலையில் முடிக்க உதவினர்.

தொடர்ந்து சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது. சுப்பர் ஓவரிலும் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்களைத் தாரைவார்த்ததால் இரசிகர்கள் கூச்சல் போட்டு ஏளனம் செய்தனர். இந்த சூழ்நிலையானது தவிர்க்க முடியாதது எனவும் இரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள் எனவும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

'விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கவேண்டும். இரசிகர்கள் தாங்கள் அடைந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர் என நான் நினைக்கிறேன். அதேவேளை, எமது வீரர்கள் நடந்தவற்றை புறந்தள்ளி வைத்துவிட்டு இப்போது மிகச் சிறப்பாக விளையாட எத்தனிக்கின்றனர். எனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து இலங்கை அணிக்கு உற்சாகமூட்டவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்' என்றார்.

கடைசிப் போட்டியில் ஒற்றைகள், இரட்டைகளாக ஓட்டங்களை எடுப்பதை விடுத்து பந்தை விசுக்கி அடித்து சிக்ஸ்கள் பெற முனைந்து விக்கெட்களைத் தாரைவார்த்ததால் இலங்கை தோல்வி அடைய நேரிட்டது என சனத்திடம் சுட்டிக்காட்டியபோது,

'கடைசிப் போட்டி சுப்பர் ஓவருக்க சென்றிருக்க வெண்டும் என நான் எண்ணவில்லை. இத்தகைய சூழ்நிலையில் எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை அடிப்பதை விடுத்து ஒற்றைகள், இரட்டைகளைப் பெறவேண்டும். இதைச் செய்தால் சிக்ஸ் அடிக்காமலேயே இலக்குகளை அடையமுடியும். பயிற்றுநர்கள் என்ற வகையில் அப்படி செய், இப்படி செய் என எங்களால் கூறமுடியும். ஆனால், ஆடுகளத்தில் இருப்பவர்களே அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றனர். எனினும் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் மிக முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றியதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. அது நிச்சயமாக ஏமாற்றத்தைக் கொடுகிறது' என சனத் ஜயசூரிய பதிலளித்தார்.

மூன்றாவது போட்டியில் வனிந்து ஹசரங்கவை துடுப்பாட்ட வரிசையில் உயர்த்தியதால்  எழுந்த விமர்சனங்கள் குறித்து கேட்டபோது,

'அப்போது ஆடுகளத்தில் இருந்த குசல் பெரேரா, வலதுகை துடுப்பாட்ட வீரரை அனுப்புமாறு சைகை செய்தார். ஏனேனில் ஓவ் ஸ்பின்னர்களை இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்வது சிரமமாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரது நோக்கம் சரியானதே. வழமையான துடுப்பாட்ட வரிசையை பின்பற்ற நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் ஒருவர் அனுப்பும் செய்திக்கும் நாங்கள் செவிமடுக்கவேண்டும். குசல் பெரேரா போட்டியை முடித்துக்கொடுத்திருந்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்.

'நடந்தது நடந்துவிட்டது. தோல்வி, தோல்விதான் அதை மாற்றமுடியாது. எனினும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எமது வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். எமது முன்வரிசை வீரர்கள் இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் துடுப்பாட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான முறைமையை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். 

கமிந்து மெண்டிஸ் 600 பந்துகளையும் குசல் பெரேரா 700 பந்துகளையும் எதிர்கொண்டனர். இடைக்காலப் பயிற்றுநர் என்ற வகையில் துடுபாட்ட வீரர்கள் மாத்திரம் அல்ல பந்துவீச்சாளர்களும் துடுப்பாட்டப் பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என நான் கூறியுள்ளேன். துடுப்பெடுத்தாடும்போது 11 பேரும் துடுப்பாட்டக்காரர்ளே. இந்த முறைமை ஏ அணி, 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கும் பொருந்தும். இதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. வீரர்களிடம் அர்ப்பணிப்புத்தன்மை இல்லாமல் இல்லை. அது தாராளமாக இருக்கிறது. ஆனால், நெருக்கடிகளை, அழுத்தங்களை அவர்கள் சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்' என சனத் ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள்...

2024-09-08 23:56:35
news-image

அமெரிக்க பகிரங்க மகளிர் ஒற்றையர் சம்பியன்...

2024-09-08 21:55:24
news-image

பராலிம்பிக் F63 குண்டு எறிதலில் இலங்கையின்...

2024-09-08 06:54:56
news-image

மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன்...

2024-09-07 23:02:17
news-image

ஒல்லி போப் ஆபார சதம், டக்கட்...

2024-09-06 23:50:06
news-image

மகாஜனாவுக்கும் ஸ்கந்தவரோதயவுக்கும் இடையிலான 22ஆவது வருடாந்த...

2024-09-06 19:46:33
news-image

வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா...

2024-09-06 18:27:27
news-image

பெண்களுக்கான பராலிம்பிக் நீளம் பாய்தலில் இலங்கையின்...

2024-09-06 16:39:22
news-image

இலங்கை - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்...

2024-09-06 16:03:44
news-image

நியூஸிலாந்தின் சுழல்பந்துவீச்சு பயிற்றுநரானார் இலங்கையின் ரங்கன...

2024-09-06 14:00:55
news-image

மகாஜனா - ஸ்கந்தவரோதயா மோதும் யாழ்....

2024-09-06 12:49:53
news-image

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை...

2024-09-06 06:22:47