கொழும்பில் பலதரப்பு சந்திப்புக்களை முன்னெடுத்துவரும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

Published By: Vishnu

02 Aug, 2024 | 12:49 AM
image

(நா.தனுஜா)

இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையினால் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் நாட்டின் பொருளாதாரத்தில் அடையப்பட்டுள்ள சாதக மாற்றங்கள் மற்றும் நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பில் ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கொழும்புக்கு வருகைதந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சந்திப்புக்களின் முடிவில் ஊடக சந்திப்பொன்றை நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், அதில் தமது அவதானிப்புக்கள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கவுள்ளனர். அது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் மூன்றாம் கட்ட மீளாய்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29
news-image

காற்றாலை மின் திட்டம் - அடுத்த...

2025-02-14 16:08:19
news-image

பக்கமுன பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-02-14 16:31:01
news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58