தமிழ் மக்களுக்கு காத்திரமான கட்டமைப்பை அமைப்பதற்காக முழுநேர அரசியலில் பிரவேசிப்பதாக அறிவித்துள்ள வர்த்தகரான எமில் காந்தன் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்துச் செயற்படப்போவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் தேசியத்தின் பெயரில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதானது தமிழ் மக்களை மேலும் தோல்வியான நிலைமைக்குள்ளேயே கொண்டு செல்லும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் போட்டியிடுவதற்கு எனது தலைமையிலான அணியினர் தயராகி வேட்புமனுக்களை தாக்கச் செய்திருந்தோம்.
அத்தகைய பின்னணியில் தற்போது நான் முழுநேர அரசியல் செயற்பாட்டில் பிரவேசிப்பதற்கு தீர்மானித்துள்ளேன். இதற்கு காரணங்கள் உள்ளன.
தமிழ் மக்கள் பாரம்பரிய அரசியல் கட்சிளையும், விடுதலை அமைப்புக்களையும் ஆதரித்துவந்தமை தான் வரலாறாக இருக்கின்ற நிலையில், அந்தக்கட்சிகளும், அமைப்புக்களும் எவ்வாறு செயற்படுகின்றன என்று தடுமாறிக்கொண்டிருகின்றனர்.
இந்தத் தருணத்தில் என்னுடைய மக்களுக்கு காத்திரமான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிடுகின்றார்கள். ஆனாலும் நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுவேட்பாளராக தன்னை அறிவித்து தேர்தலில் போட்டியிடவுள்ளார். நானும், என்சார்ந்த அரசியல் அமைப்பினரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தோதலில் அவரை ஆதரித்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துக்கின்றவர்களில் ஒருதரப்பினர் தமிழ்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
குறித்த தரப்பினர் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் வடக்கு,கிழக்கினை மையப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நித்துவார்களாக இருந்தால் அந்தச் செயற்பாடானது, தமிழ் மக்களை தோல்விப்பாதைக்கு இழுத்துச் செல்கின்றதொரு செயற்பாடாகவே இருக்கப்போகின்றது
அந்தவைகயில், தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்துவதை நான் முழுமையாக எதிர்ப்பதோடு தமிழ் மக்களை அச்செயற்றிட்டத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டியதும் அவசியமாகவுள்ளது.
மேலும், தமிழ் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, யாரும் சாவால்களை ஏற்பதற்கு அச்சமடைந்திருந்த நிலையில் துணிச்சலாக தலைமைத்துவத்தினைப் பொறுப்பேற்று நாட்டில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே அவருடைய தெரிவின் மூலமாகவே தற்போதைய பரம்பரையினரும்,எதிர்கால சந்ததியினரும் வாழக்கூடியசூழல் ஏற்படும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுபற்றி விடயத்தில் 13ஆவது திருத்தச்சட்டம், காணி,பொலிஸ் அதிகாரம் பற்றி பலதடவைகளில் பேசப்பட்டுள்ளது.
என்னுடைய வயதுக்கு அண்மித்த காலத்தில் அதுபேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே தொடர்ந்தும் கடந்த காலத்தைப்போன்று அதேபாணியில் பேச முடியாது. அரசியலமைப்பில் காணப்படுகின்ற அதிகாரங்கள் அமுலாக்கப்படும். அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்வார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM