உலகத்தில் நாற்பது வயதில் வயதிலிருந்து அறுபது வயதிற்குட்பட்டவர்களில் ஆயிரம் நபர்களில் இரண்டு நபர்களுக்கு கொழுப்பு கட்டி பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்தியம் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமென்றாலும் கொழுப்பு கட்டிகள் ஏற்படக்கூடும். எம்முடைய தோல் பகுதியின் அடிப்பகுதி மற்றும் தசையின் மேல் பகுதி இவற்றிற்கு இடையே கொழுப்பு செல்கள் அமைந்திருக்கின்றன. இந்த செல்கள் எம்முடைய உடலில் இயற்கையாகவே அமைய பெற்றிருக்கும். புற சூழலில் உள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தினால்... எம்முடைய உடலின் உள் உறுப்புகள் பாதிக்காத வண்ணம் சீரான வெப்ப நிலையில் பராமரிப்பதற்கு இந்த கொழுப்பு செல்கள் உதவி செய்கிறது. மேலும் இந்த செல்கள் ஆற்றல்களை கொண்டிருப்பதால்.. சோர்வடையும் தருணங்களில் இதில் உள்ள கொழுப்பு செல்களிலிருந்து சக்திகள் கிரகிக்கப்பட்டு, நாம் ஆற்றலை பெறுகிறோம்.
கொழுப்புச் செல்கள் எம்முடைய ஆரோக்கியத்திற்கு உதவி புரிந்தாலும் விவரிக்கப்படாத அல்லது இனம் கண்டறிய இயலாத காரணங்களினால் இவற்றின் வளர்ச்சி அசாதாரணமாக இருந்தால்... அங்கே அவை கொழுப்பு கட்டியாக உருமாற்றம் பெறுகிறது. தோலின் மேற்பகுதியில் இவை விரைவான வளர்ச்சியை பெறுவதால் கட்டியை நாம் கண்களால் காண இயலும். இதனை மருத்துவ மொழியில் லைபோமா என குறிப்பிடுகிறார்கள்.
பாரம்பரிய மரபணு மாற்றம், உடற்பருமன், நீரிழிவு, குருதியில் கொழுப்பின் அளவு இயல்பான அளவை விட கூடுதலாக இருப்பது, கல்லீரல் பாதிப்பு, மது அருந்து பழக்கம்... என பல்வேறு காரணங்களால் கொழுப்பு கட்டி பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்த கொழுப்பு கட்டியின் அளவு அதிகமாக இருந்தாலோ கொழுப்பு கட்டியினால் தொந்தரவுகள் ஏற்பட்டாலோ.. குறிப்பாக அர்பிட்டல் லைபோமா எனப்படும் பாதிப்பு கண்களுக்கு உள்ளேயும், கண்களுக்கு வெளியேயும் இருந்தாலோ... அத்தகைய கொழுப்பு கட்டிகளை சத்திர சிகிச்சை மூலமாகத்தான் அகற்ற வேண்டியதிருக்கும். வேறு சிலருக்கு மூச்சுக்குழாய், கழுத்து, வயிற்றின் உள் பகுதி.. என பல்வேறு இடங்களில் கொழுப்புக் கட்டிகள் உண்டாகலாம் . இவை நாளாந்த வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதால் இதனை சத்திர சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டியதிருக்கும்.
பெரும்பாலும் கொழுப்புக் கட்டிகள் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் கொழுப்பு கட்டிகளின் அளவு திடீரென்று அதிகரித்தாலோ... அந்தக் கொழுப்பு கட்டி கடினத் தன்மையுடன் இருந்தாலோ... முகத்தில் ஏற்பட்டு முகத் தோற்றத்தை விகாரமாக்கி.. தன்னம்பிக்கையை பாதித்தாலோ.. அத்தகைய கொழுப்பு கட்டிகளை அகற்றுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
- வைத்தியர் முகுந்தன்
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM