நாட்டின் பெரும்பாலான பாகங்களில் கடும் மழைபெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வழிமண்டலத்தில் ஏற்பட்டுள் தளம்பல் நிலையையடுத்தே இந்தநிலையேற்பட்டுள்ளதாகவும் 100 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுமெனவும் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மாத்தறை ஊடாக திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு வரை காற்றின் வேகம் காணப்படுமெனவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.