பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி போட்டியிடுவார் - சுசில் பிரேமஜயந்த

Published By: Digital Desk 7

01 Aug, 2024 | 08:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஜனாதிபதி வசமாகி விட்டது.பொதுஜன பெரமுனவினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்ததாக ராஜபக்ஷர்களின் உறவினர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் நபர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யானது.மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர்கள் கடந்த காலங்களில் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடியான சூழ்நிலையின் போது நாட்டுக்காக சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.2022 ஆம் ஆண்டு இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதற்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என்று பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.பொதுஜன பெரமுனவின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டு மக்களை பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது கட்சியின் கொள்கைக்கு எதிரானதொரு தீர்மானமல்ல,கட்சிக்கு முன்னுரிமை வழங்குவதை விட நாட்டுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஜனாதிபதி வசமாகி விட்டது.2022 ஆம் ஆண்டின் சமூக கட்டமைப்பின் நிலைவரத்துக்கும்,தற்போதைய நிலைவரத்துக்கும் இடையில் பாரிய மாற்றம் காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45