அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 2' படத்தின் பாடல் வெளியீடு

01 Aug, 2024 | 04:14 PM
image

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நொடிகளே..' எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் 'டிமான்டி காலனி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஜய் ஞானமுத்து, எட்டு ஆண்டுகள் கழித்து 'டிமான்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாரான இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் -விஜய் சுப்பிரமணியன்- ஆர் சி ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'நொடிகளே..' எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் பாடலாசிரியை ஐக்கி பெர்ரி எழுத,  இசையமைப்பாளரும் , பாடகருமான சாம் சி. எஸ். மற்றும் பாடகி ஐக்கி பெர்ரி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசை + மேலத்தேய தாள லயம் +  தமிழ் மற்றும்  ஆங்கில மொழி பாடல் வரிகள் என வித்தியாசமான கலவையுடன் இந்தப் பாடல் உருவாகி இருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களிடையே மட்டும் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்...

2025-02-13 17:37:33
news-image

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி...

2025-02-13 17:36:57
news-image

மீண்டும் நடிக்கும் 'காதல் ஓவியம்' புகழ்...

2025-02-13 15:52:49
news-image

கவனம் ஈர்க்கும் ராம் கோபால் வர்மாவின்...

2025-02-13 15:42:51
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ' கிங்டம்...

2025-02-13 15:37:05
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-02-13 15:33:45
news-image

மகளின் ஆசையை நிறைவேற்றும் இளையராஜா

2025-02-13 13:45:38
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14