'ரகு தாத்தா' படத்தில் புதுமைப்பெண்ணாக தோற்றமளிக்கும் கீர்த்தி சுரேஷ்

01 Aug, 2024 | 04:10 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய், எம். எஸ். பாஸ்கர், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, இஸ்மத் பானு, ஆதிரா பாண்டிய லக்ஷ்மி, ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பெண்கள் மீதான திணிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ்- வீட்டில் காலம் காலமாக பெற்றோர்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளை மீறும் புதுமை பெண்ணாகவும், தனக்கான தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும் கதாபாத்திரமாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், காட்சிகளும், வசனங்களும் கவனத்தை ஈர்ப்பதாலும், படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 16:47:54
news-image

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'சிக்மா'...

2026-08-13 16:33:18
news-image

"வேலை இல்லை என்பதால்தான் பிக் பொஸ்...

2026-08-13 11:19:55
news-image

67 ஆண்டுகள் சினிமா பயணம்… உலக...

2026-08-13 11:28:39