சுவசெரிய VUடன் இணைந்து ஹிக்கடுவைக்கென ஆம்புலன்ஸ் ஒன்றை புதுப்பித்துள்ள NDB வங்கி

Published By: Digital Desk 7

01 Aug, 2024 | 03:58 PM
image

சுவசேரிய அறக்கட்டளையுடன்   கைகோர்ப்பதன்மூலம் அம்புலன்ஸ் ஒன்றைப் புதுப்பித்து  NDB இலச்சனையுடன் முத்திரையிடப்பட்டு, நவம் மாவத்தையில் உள்ள NDB தலைமை அலுவலகத்திலிருந்து ஹிக்கடுவைக்கு ஸ்ரீஅதிகாரப்பூர்வமாக மீண்டும் அனுப்பப்பட்டதுடன், இது சரியான நேரத்தில் மருத்துவ உதவியை உறுதி செய்யும் அதே வேளையில் சமூகம் சார்ந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் NDB இன் தற்போதைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

NDB முத்திரை குத்தப்பட்ட அம்புலன்ஸ், ஒரு வருட காலத்திற்கு ஹிக்கடுவ பகுதியில் இயங்குவதன் மூலம் தேவைப்படும் மக்களிற்கு முக்கியமான அவசரகால சேவைகளை வழங்கும்.

NDB பணிப்பாளர் /பிரதம நிறைவேற்றதிகாரி கெலும் எதிரிசிங்க, இந்த பங்குடைமைக்கான தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி பேசுகையில் ”ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், இந்த தேசிய நோக்கத்திற்கு ஆதரவளிப்பதில் 1990 சுவசெரிய அறக்கட்டளையுடன் கூட்டிணைவதை NDB வங்கி பெருமையாக கருதுகிறது. வைத்தியசாலைக்கு முந்தைய அவசரகால சேவைகளை அணுகுவற்கு அனைவருக்கும் உரித்துள்ளது. என நாம் நம்புவதுடன் இந்த முயற்சியானது நமது சக குடிமக்களின் நல்வாழ்வுக்கு பங்களிப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமைகின்றது” 

1990 சுவசெரிய அறக்கட்டளை நாடு முழுவதும் இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

NDB வங்கியுடனான இந்த கூட்டிணைவானது, குறிப்பாக தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், காலத்தினாலானதும் வினைத்திறன்மிக்கதுமான அவசர சிகிச்சையை வழங்குவதற்கான அறக்கட்டளையின் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்