பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய பொய்ஸ் படத்தில் நடிகர் நகுல் அறிமுகமானர்.  இவருக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி பாஸ்கர் என்பவருக்கும் நேற்று காலையில் திருமணம் நிச்சயம் நடைபெற்றது.

திருமணம் எப்போது என்பதும் குறித்து விரைவில் அதிகாரப்பூர்மாக தெரிவிக்கவிருப்பதாகவும் தன்னுடைய ட்வீட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
பொய்ஸ் படத்திற்கு பிறகு நாக்க முக்க.. என பாடி காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப்போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் நாரதன் அமளிதுமளி என சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். 


நடிகை தேவயானியின் இளைய தம்பியான நகுலும் அக்காவைப் போல் காதலித்து தான் ஸ்ருதியை கரம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் : சென்னை அலுவலகம்