தோட்ட அதிகாரியை இடமாற்றகோரி தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Published By: Digital Desk 3

01 Aug, 2024 | 02:14 PM
image

தோட்ட அதிகாரி தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கியதாக கூறி தோட்ட அதிகாரியின் அடாவடித் தனத்தை கண்டித்து தலவாக்கலை ட்றூப் தோட்ட தொழிலாளர்கள் இன்று வியாழக்கிழமை (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை  ட்றூப் தோட்ட பிரிவுகளான ட்றூப், கொரின், கிளனமோரா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 400 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியின் அடாவடித்தனத்தை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

ட்றூப் தோட்டத்தில் அறுவடை செய்யப்படும் தேயிலை கொழுந்துகளை தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அரைப்பதற்காக கொண்டு வருவதாகவும், தேயிலை கொழுந்துகளை கொண்டு வரும்போது தேயிலை கொழுந்துகள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறி தலவாக்கலை தோட்ட அதிகாரி  தோட்ட தொழிலாளி ஒருவரை செவ்வாய்க்கிழமை (30) மாலை  தாக்கியுள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் புதன்கிழமை (31) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தலவாக்கலை தோட்ட அதிகாரி அத்தோட்டத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படும் வரை  வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் தோட்டத் தொழிலாளி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளதோடு,  லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் மாலை நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தோட்ட தொழிலாளியின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50