காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடிய பலர் இறந்துவிட்டார்கள்; சர்வதேசம்தான் துணை நின்று  நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் - ரவிகரன்

01 Aug, 2024 | 02:04 PM
image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய பலர் இறந்துவிட்டார்கள். சர்வதேசம்தான் துணை நின்று இவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  நேற்றைய தினம் (31) முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  துரைராசா ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற ஒரு விடயத்துக்காக 15 வருடங்களாக தங்களுடைய உறவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றார்கள். 

அரசாங்கமானது ஓமந்தை, வட்டுவாகல், கடல், வேறு முகாம்களிலும் சரி உறவுகளை நேரடியாக கொண்டுசென்று ஒப்படைத்திருந்தார்கள். ஒப்படைத்த உறவுகளைத்தான் எங்களுக்கு தாருங்கள், எங்களோடு இணைத்துவிடுங்கள் என கேட்டு நிற்கிறார்கள். 

இதனைக் கூட நிறைவேற்ற முடியாத அரசாங்கம் அல்லது இனவாத அரசாங்கம் இதனை கூட செய்ய முடியாமல் நாங்கள் அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று ஆசை வார்த்தைகளை கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களுக்குரிய விடையை அவர்கள் கூற வேண்டும்.

இதற்கு சர்வதேசம்தான் எங்களோடு துணை நிற்க வேண்டும். இதற்குரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். இந்த உறவுகளை தேடித்தர வேண்டும் என்று கூறியே இங்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு போராடிய பல பேர்  இறந்துவிட்டார்கள்; தாய்மார் இறந்துவிட்டார்கள்; தகப்பன்மார் இறந்துவிட்டார்கள். 

அவர்கள் கேட்பது என்ன? எங்களுடைய உறவுகளை, எங்களிடம் ஒப்படையுங்கள். 

இதைக் கூட செய்ய முடியாத ஒரு அரசாங்கம் நீங்கள் உங்களிடம் ஒப்படைத்தவர்களை நீங்கள் மீள கொண்டுவந்து கொடுப்பதற்கோ அதற்கான முடிவுகளை தெரிவிப்பதற்கோ, முடியாத நிலையில் கையாலாகாத தனமாகத்தான்  இருக்கின்றீர்கள். சர்வதேசமாவது கூடிய கவனமெடுத்து இந்த உறவுகளின் கோரிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13