கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் மாணவி ஸ்ரீ மாதுரி சிந்தனைச்செல்வன் அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச Chemistry Olympiad 2024 போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 3A சித்தி பெற்று, மாவட்ட ரீதியில் 4ஆம் இடத்தையும், தேசிய ரீதியில் 22ஆம் இடத்தையும் ஸ்ரீ மாதுரி பெற்றுள்ளார்.
தேசிய ரீதியில் இடம்பெற்ற Chemistry Olympiad 2024 போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஸ்ரீ மாதுரி, சவூதி அரேபியா ரியாத் நகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவானார். அங்கு வெண்கல பதக்கத்தை வென்று நாட்டுக்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரது தந்தை சிந்தனைசெல்வன் பௌதிகவியல் ஆசிரியர்; தாயார் ஸ்ரீ கௌரி உயிரியல் ஆசிரியை மற்றும் விரிவுரையாளர் ஆவர்.
சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டிகளில் அவர் கலந்துகொள்வதற்கான அனுசரணையை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்க UK கிளை வழங்கியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM